சிறிலங்கா கடற்படையால் 15 இந்திய மீனவர்கள் கைது
Indian fishermen
Mannar
Sri Lanka Navy
By Sumithiran
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
இதன்போது, இரண்டு இந்திய படகுகளும் சிறிலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை கைது
இன்று மாலை தலைமன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் படகில் இருந்த பதினைந்து (15) இந்திய மீனவர்கள் தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்