இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியக் கடவுச்சீட்டு : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
இந்தியாவில் பிறந்த "நாடற்றவர்" என்ற நிலையில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசாங்கத்துக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தனது விண்ணப்பத்தை பரிசீலித்து இந்திய கடவுச்சீட்டை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி 2024 இல், இலங்கையின் ஏதிலி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்தபோதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றின் இந்த உத்தரவு, இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணத்தை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்களது நாட்டிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் அல்லது விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், பரமத்தி வேலூரில் உள்ள காவல்துறை, அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
