யாழ்.சுற்றுலா வந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனை
பின்னர் நேற்றுமுன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்