ஈரானில் மற்றுமொரு வெடிவிபத்து :அறுவர் பலி பலர் படுகாயம்
ஈரான் கடற்படை தளபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியான நிலையில் அற்கு மற்றுமொரு வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஈரானில் உள்ள பிரபல துறைமுகமான பந்தர் அபாசில் ஈரான் நாட்டிற்கு சொந்தமான போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து
திடீரென அந்தத் துறைமுகத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மறுப்பு
இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தில் தாம் ஈடுபடவில்லை என அமெரிக்காவும் இஸ்ரேலும் மறுத்துள்ளன.
ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் நடந்த வெடிப்பு, அந்தப் பகுதியில் எந்தவொரு இராணுவ நடவடிக்கையுடனும் தொடர்புடையது அல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய இராணுவ இலக்கில் குறிவைக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுவதையும் இஸ்ரேல் அரசாங்கம் மறுத்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
காணொளி - https://www.facebook.com/reel/26188322800752773
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |