யாழில் இராணுவத்தினரின் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ். மயிலிட்டி பகுதியில் இன்று (02.02.2026) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் வீதியைக் கடக்க முயன்றபோது அவர் மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்து சம்பவத்தில் நவரட்ணம் என்ற முதியவரே உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாகனத்தை செலுத்திய பெண் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து பலாலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - த.பிரதீபன், பு.கஜிந்தன்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |