யாழில் 10 ஆண்டுகளாக வரலாற்று பாட ஆசிரியர் இல்லாத பாடசாலை
Ministry of Education
Jaffna
Education
schools
By Kajinthan
யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த 10 வருடங்களாக வரலாற்று பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டது.
வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை
குறித்த பகுதியிலுள்ள ஏனைய சில பாடசாலைகளுக்கு, வரலாற்று பாடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரிடம், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ பவானந்தராஜா கேள்வி எழுப்பியதுடன், குறித்த வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி