இலங்கை தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்
தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேங்காய் அறுவடையை 4,200 மில்லியனாக உயர்த்துவதே தமது இலக்கு என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சபையின் தலைவர் சாந்த ரணதுங்க, தென்னைச் செய்கைத்துறைக்கு இது மிகவும் சாதகமான காலம் என தெரிவித்துள்ளார்.
தீங்கு விளைவிக்கும் எண்ணெய்
இதேவேளை, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளைக் கலந்து சந்தைக்குக் கொண்டுவரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.
அந்த நிலைமை காரணமாகப் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகள் சந்தையில் அதிகமாகப் புழக்கத்திற்கு வரும் அபாயம் உள்ளதாகவும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |