தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை..! நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று (2.02.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை 12,000 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
நேற்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, அதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கம் ரூ. 338,600 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், '24 கரட்' ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 368,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இது கடந்த வௌ்ளிக்கிழமை 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை இன்றைய (2) தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்