கஸ்ஸப்பவின் திட்டங்கள் குறித்து பகிரங்கப்படுத்திய அநுர
நாட்டில் தற்போது சில தரப்புக்களால் முன்னெடுக்கபட்டு வரும் போராட்டங்கள் இலங்கைக்குள் அராஜக நிலையை உருவாக்கும் திட்டத்துடன் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
பலங்கொட கஸ்ஸப தேரர் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட விடயத்தை தெரிவித்த அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அச்சத்தில் மக்கள்
“நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை விமர்சிக்க எவருக்கும் எந்த தடையும் இல்லை.

எனினும் அவை சட்டத்துக்கு உட்பட்டு ஒழுங்குமுறையின் கீழ் இடம்பெற வேண்டும்.
ஒரு நேரத்தில் உண்ணா விரதம் இருப்பதாகவும் மறு நேரம் தடியை சுழற்றிக்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை எண்ணி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவை நாட்டை சீர்குலைக்கும் போராட்டங்களாகும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |