நுவரெலியா - A7 வீதியில் பாரிய விபத்து : 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா - தலவாக்கலை (A7) பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நானுஓயா, டெஸ்போர்ட் பகுதியில் இன்றைய தினம் (14) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுடன் நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தொன்றும், எதிர் திசையில் நுவரெலியாவிலிருந்து அக்கரபத்தனை நோக்கிப் பயணித்த பேருந்தொன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இரண்டு பேருந்துகளின் சாரதிகளினதும் கவனக்குறைவான வாகனச் செலுத்துதலே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |