ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமாகவும் முன்னெடுக்கப்படும் என்று ஹரிணி அமரசூரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகளுடன் நேற்று (13) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்முகப் பரீட்சைகள்
தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கு முதல் கட்டமாக 17, 000 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |