முதுகெலும்பிருந்தால் முகத்துக்கு நேரே பேசவும்! ஹக்கீமுக்கு பிமல் விடுத்த சவால்
வரவு செலவு திட்டம் மீதான இன்றைய நாடாளுமன்ற உரையின் போது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்த ரவூப் ஹக்கீம், நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படையைப் பயன்படுத்தி வேவு பார்ப்பது போன்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டாம் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், ஈரானிய வீரர்கள் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் அமெரிக்காவுக்குப் பயந்து நடுங்கியதாகவும், வெனிசுலா ஜனாதிபதி கடத்தப்பட்டபோது வெளியுறவு அமைச்சு சரியான அறிக்கையைக் கூட வெளியிடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
காசா மக்கள் மழையில் படும் துயரங்களைக் கவனத்தில் கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலில் நகைச்சுவை
ரவூப் ஹக்கீம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இடைமறித்த அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்ப முற்பட்டார்.

இதன்போது, ஒரு உறுப்பினர் பேசும்போது இடைமறிக்கக் கூடாது, அமைதியைக் காக்க வேண்டும் எனக் கூறியதோடு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய அவர், , இப்போது பேசிய இந்த நபர் (அர்ச்சுனா), முழு நாடாளுமன்ற வரலாற்றிலுமே இல்லாத அளவுக்கு இந்தச் சபையைக் களங்கப்படுத்திய ஒரு உறுப்பினர். இவர் முழு நாடாளுமன்றத்திற்கும் ஒரு அவமரியாதை. எனக் கடுமையாகச் சாடினார்
இந்நிலையில் ரவூப் ஹக்கீமின் விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, வெளிப்படுத்தினார்.
அரசியலில் நகைச்சுவைக்கு இடமில்லை எனவும், சக உறுப்பினர்களுடன் நகைச்சுவை செய்யலாமே தவிர அரசாங்கத்துடன் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது எனவும் எச்சரித்தார்.
"முதுகெலும்பிருந்தால் மறைமுகமாகப் பேசாமல் நேரடியாகப் பேசுங்கள்" எனச் சவால் விடுத்த அவர், நாட்டுக்குப் பாதிப்பான எந்தவொரு திட்டத்திற்கும் அரசாங்கம் கொள்கை ரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என கூறினார்.
காங்கேசன்துறை துறைமுகத் திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக ஹக்கீமால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பிமல் ரத்நாயக்க மறுத்த நிலையில், புதிய துறைமுக அமைச்சர் அனுர கருணாதிலக்கவும் இது குறித்துப் பதிலளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |