மக்களே கவனம்..! தேங்காய் எண்ணெய் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டில் தேங்காய் எண்ணெயில் நடக்கும் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளைக் கலந்து சந்தைக்குக் கொண்டுவரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் விலை
அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் மூலம் உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த நிலைமை காரணமாகப் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகள் சந்தையில் அதிகமாகப் புழக்கத்திற்கு வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தேங்காயை வெளிநாட்டு ஏற்றுமதி
வைத்தியர்களின் கருத்துப்படி, அதிக சூட்டில் உணவைப் பொரிப்பதற்குத் தேங்காய் எண்ணெய் மட்டுமே உகந்தது எனவும், பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது சுகாதார அபாயங்களை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தென்னை சார்ந்த உற்பத்தியை ஏற்றுமதி செய்பவர்கள், உள்ளூர் சந்தைக்குத் தேவையான தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காயை வெளிநாட்டு ஏற்றுமதிக்குப் பயன்படுத்துவதால், உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.
அதன் மூலம் நுகர்வோர் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை நுகர்வதற்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும் எனவும் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |