மின்வெட்டு குறித்து விசேட அறிவிப்பு
Power cut Sri Lanka
Sri Lanka Electricity Prices
Interim Government In Sri Lanka
By Dharu
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு இதுவரை மின்வெட்டு எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்வெட்டு செய்யப்பட வாய்ப்புள்ளது என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மின்வெட்டு நடைமுறை
நிலையான ஆணை 27.2-இன் கீழ், மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பதிலளித்த அமைச்சர், "நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டு இல்லாமல் தொடர்வோம், ஆனால் மின்வெட்டுக்கு மற்றொரு நேரம் வரலாம் " என்று கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்