எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்!
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையால் கோரப்பட்ட எரிபொருள் இருப்பை ஏற்றி வந்த மற்றொரு கப்பல் கொழும்பு வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹொங்காங் இராச்சியத்திற்குச் சொந்தமான 'சீஃபிரான்டியர்' என்ற எரிபொருள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் கொண்டுவந்த எரிபொருள் இன்று காலை கெரவலப்பிட்டிய எரிபொருள் கிடங்கில் இறக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் அளவு
எரிபொருள் இருப்பின் மற்றொரு பகுதி இன்று பிற்பகல் கொழும்பு டால்பின் ஜெட்டிக்கு கொண்டுவரப்பட்டு கொலன்னாவ கிடங்கிற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சு கூறியுள்ளது.

இந்தக் கப்பல் 17,000 மெட்ரிக் டன் 90 ஒக்டேன் பெட்ரோல், 18,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |