தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்
புதிய இணைப்பு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை திருத்தப்பட்டமை வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் இன்று (05.02.2026) தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று 24 கரட் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலையாகக் காணப்படும் நிலையில், 22 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 1,900 ரூபாவால் அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்திற்கான தேவை மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக 22 கரட் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 22 கரட் தங்கம் 356,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,513 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், எதிர்வரும் நாட்களில் உள்நாட்டுச் சந்தையிலும் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நகையக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |