இன்று 4 இலட்சத்தை தொட்ட தங்க விலை
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இன்று (3) தங்கத்தின் விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் டொலரின் பெறுமதி மாற்றங்களுக்கு அமைய, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இவ்வாறான தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றது.
கிராமின் விலை
24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 1,000 ரூபாயால் அதிகரித்து 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 1,000 ரூபாயால் அதிகரித்து 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி கட்டுப்பாடு
இதேவேளை, இந்திய அரசு, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பில், “இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், Letter of Credit, முன்பணம், கப்பல் அனுப்பும் நிலை போன்றவை எந்தவித சலுகையையும் பெறாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்