நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

Sri Lanka Police Investigation Negombo Death
By Dharu Jul 08, 2026 09:31 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதன்படி, மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் ஆறாம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு | Another Prison Officer Dies

சிறையினுள் நடைபெற்ற போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கச் சென்ற 'மந்த போலீஸ்' எனப்படும் சிறப்புப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த பாரிய கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூரமான மோதல் சம்பவங்கள் குறித்த பின்னணிச் சூழலை ஆராய்வதற்காக, சுயாதீனக் குழுவொன்றை நியமிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

இக்குழுவின் கண்டுபிடிப்புகள் நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் ஆக்கபூர்வமான, நீடித்த சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான பொது நிதி முறைகேடு வழக்கு! சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு விசேட உத்தரவு

ரணிலுக்கு எதிரான பொது நிதி முறைகேடு வழக்கு! சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு விசேட உத்தரவு

சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை

சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை

you may like this

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026