தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் அரச நிறுவனங்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கான சேவைகள் தடைப்படாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை (30-11-2026) தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுச் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமைச்சுகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை தவணை
அத்தோடு டிசம்பர் நான்காம் திகதி பாடசாலை தவணை முடியும் வரை கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளைத் தடையின்றி நடத்துமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இதனுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தயாரிப்புகளைப் பாதிக்காத வகையில் செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களமும் அறிவுருத்தியுள்ளது.

இந்தநிலையில் தொடருந்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் சுகாதாரத் துறைகளுக்கும் தடையற்ற சேவைகளை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டங்களை ஒத்திவைக்குமாறு சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
மேலும் அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |