ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துத் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) அதிகாலை இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) இதனை தெரிவித்துள்ளது.
கடல்சார் விதிமுறைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி அங்கீகரிக்கப்படாத தெற்கு வழித்தடத்தில் பயணித்த போது இந்தக் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் முற்றுகை
இரண்டு மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற ஒரு பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் (supertanker), கசப் (Khasab) துறைமுகத்திற்கு வடக்கே கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.
இரண்டாவது கப்பல், ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறும் போது கிழக்குப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கித் தீப்பிடித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத பாதைகளில் செல்லும் கப்பல்களை எச்சரித்துள்ள IRGC, அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதிகளின் (CENTCOM) பொய்யான வாக்குறுதிகளை நம்பிப் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் முற்றுகை மற்றும் மோதல்கள் தொடரும் நிலையில் அங்கீகரிக்கப்படாத வழித்தடங்களில் கண்ணிவெடித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஈரானியத் தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |