தடையின்றி இயங்கும் ஈரான் - துருக்கி இடையிலான விமானச் சேவைகள்!
ஈரான் மற்றும் துருக்கி இடையிலான விமானச் சேவைகள் இருவழிகளிலும் எந்தத் தடையுமின்றித் திட்டமிட்டபடி இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
விதித்த தடை
இந்தநிலையில் ஈரான் ஏர் (Iran Air), ஈரான் ஆஸ்மான் ஏர்லைன்ஸ் (Iran Aseman Airlines) மற்றும் காஸ்பியன் ஏர்லைன்ஸ் (Caspian Airlines) உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஈரானிய விமான நிறுவனங்கள், துருக்கியேயின் இஸ்தான்புல், அங்காரா மற்றும் வான் ஆகிய நகரங்களுக்குத் தினசரி நேரடி விமானங்களை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவை வழங்கியதற்காக அமெரிக்கா விதித்த தடைகளைத் தொடர்ந்து துருக்கி விமான நிலைய தரைவழிச் சேவை நிறுவனமான ஃபூகோ (FUGO) தனது செயற்பாடுகளை நிறுத்தவுள்ளதாகத் துருக்கியின் DHA செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமானக் கண்காணிப்பு இணையதளமான ஃபிளைட்ரேடார்24 (Flightradar24) தகவலின்படி, துருக்கி நோக்கிய விமானம் ஒன்று இன்று (29-11-2026) காலை தெஹ்ரானிலிருந்து புறப்பட்டுள்ளதுடன் இன்று பிற்பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தடைகள் மற்றும் பிராந்திய அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |