நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

Prisons in Sri Lanka Prison Ministry of justice Sri lanka
By Thulsi Jul 08, 2026 06:26 AM GMT
Report

புதிய இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலும் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் குழு ஒன்று, சிறை அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மரணங்கள் சிறை அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் செயல் என்று அக்குழு நேரடியாகத் தெரிவித்துள்ளது. 

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி | Negombo Prison Transferred To Boossa Dies

இதன்படி கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமல் சில்வா மற்றும் அதன் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோர் சமூக ஊடகங்களில் இந்த விடயத்த பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். 

 முதலாம் இணைப்பு

பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.  

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குறித்த கைதி உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை

மரணத்திற்கான காரணம்

கைதியின் மரணத்திற்கான காரணம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி | Negombo Prison Transferred To Boossa Dies

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 1,033 கைதிகள் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 7 சிறைசாலை அதிகரிகள் உயிரிழந்துள்ளார்கள்.

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

நடுவானில் மாயமான சரக்கு விமானம்

நடுவானில் மாயமான சரக்கு விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026