நபர் ஒருவர் மீது தாக்குதல்: புத்தளம் நகர சபைத் தலைவருக்கு நீதிமன்றின் உத்தரவு
Puttalam
Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
புத்தளம் நகர சபைத் தலைவர் ரின்சாட் அஹமட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் நகரில் நடைபாதையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, புத்தளம் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மீண்டும் விசாரணை
இதனை தொடர்ந்து ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (30-11-2026) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |