மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்!

Sri Lanka Economy of Sri Lanka Iran-Israel War
By Abi Mar 30, 2026 07:57 AM GMT
Report

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து படிபடியாக மீண்டும் வரும் எமது நாட்டிற்கு 2026 பெப்ரவரி 28 அன்று ஈரானின் மூலோபாய சொத்துக்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய இராணுவத் தாக்குதலின் விளைவுகள் ஒரு புவிசார் அரசியல் அதிர்ச்சியைத் தூண்டியுள்ளது.

புவியியல் ரீதியாக தொலைவில் இருந்தாலும், எரிசக்தி சார்பு, வர்த்தக இணைப்புகள், வர்த்தக ஏற்றுமதியில் இடையூறு, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் மூலம் இலங்கை மத்திய கிழக்கு நாடுகளின் நிலையற்ற தன்மையினால் மீண்டும் உயிர்பெறத் தொடங்கிய இலங்கை தற்போது பலவீனமான பொருளாதார ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் எதிர்கொண்டுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

போர் பதற்றம்

மத்திய கிழக்கில் கடந்த 28.02.2026 அன்று நடந்த அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த இராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, இலங்கையின் பலவீனமான பொருளாதாரத்தின் மீட்சியை கடுமையாகப் பாதித்துள்ளதை நாங்கள் யாவரும் அறிந்ததே.

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! | Current Situation In Sri Lanka Middle East War

அமெரிக்காவின் “ஒபரேஷன் எபிக் ஃபியூரி” மற்றும் இஸ்ரேலின் “ரோரிங் லயன்” ஆகியவற்றின் கீழ், தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் கோம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் தலைமைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு.

இதற்குப் பதிலடியாக, ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு, குவைத், கட்டார், பஹ்ரைன், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 125 வெளிநாட்டினர்

இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 125 வெளிநாட்டினர்

எரிபொருள் விலை உயர்வு

இவ்வாறான பதற்றத்திற்கு மத்தியில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் இலங்கையின் எரிசக்தி விலைகளில் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலகளாவிய எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலரைத் தாண்டியதால், பெப்ரவரி 28 ஆம் தினதியன்று அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை உயர்வு இலங்கையின் விலை நிர்ணய சூத்திரத்தைப் பின்பற்றிய போதிலும், அது பொதுமக்களின் கவலையைத் தீவிரப்படுத்தி எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியது.

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! | Current Situation In Sri Lanka Middle East War

எரிபொருள் விலை உயர்வால் ஏற்படுத்திய தாக்கங்களில்  போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடைந்தமை, சிறப்பு அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, தங்கத்தின் விலை மாற்றம் என்பன உறுவாகியிருந்தன.

வர்த்தக இடையூறு 

மேலும், இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த விடயங்களில் சீர்குலைத்து வருவதை நாம் அவதானிக்க கூடியதாகவே உள்ளது.

மத்திய கிழக்கு ஏற்றுமதியில் ஒரு முக்கிய சந்தையாகவும் , இன்றியமையாத இறக்குமதி ஆதாரமாகவும் இருப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறிப்பாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

NPP நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து

NPP நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து

போர் அபாய நிலை காரணமாக சரக்கு அனுப்பும் நேரத்தை 10 முதல் 14 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! | Current Situation In Sri Lanka Middle East War

கப்பல் போக்குவரத்து தடைகளால் அதிகரித்த சரக்கு கட்டணங்கள் காரணமாக, மார்ச் 2026இல் ஏற்றுமதி 5 - 8 வீதம் வரை சுருங்கும் எனக் கணிக்கப்பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான ஆடை மற்றும் ரப்பர் ஏற்றுமதிகள் போட்டித்தன்மை அதிக சரக்குக் கட்டணங்கள் காரணமாக குறைந்து வருகின்றன.

நாளை - நாளை மறுநாள் எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு

நாளை - நாளை மறுநாள் எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு

ஏற்றுமதி வர்த்தகம்

குறிப்பாக மத்திய கிழக்குக்கான முக்கிய ஏற்றுமதி பண்டமான தேயிலை மற்றும் ஆடை போன்ற முக்கியத் துறைகளின் சுமார் 25 வீதத்தை ஏற்றுமதி செய்ய பணம் செலுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்கின்றன.

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! | Current Situation In Sri Lanka Middle East War

ஈரானில் ஏற்பட்ட நாணய மதிப்புச் சரிவு மற்றும் வங்கித் துறை இடையூறுகள் காரணமாக புதிய வரவுகள் முடங்கியுள்ள நிலையில் சந்தைகள் குறைந்து சிறுபோக தேயிலை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றக்கும்பல் உறுப்பினர்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றக்கும்பல் உறுப்பினர்

அத்தோடு வெளிநாட்டிலிருந்து எமது நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் அந்நியச் செலாவணியின் மிக முக்கியமான ஒற்றை ஆதாரமாகும்.

இதன் விளைவாக வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தின் இழப்பு மில்லியன் கணக்கான குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கும் ஒரு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியாக அமைந்துள்ளது.

சுற்றுலாவில் ஏற்படும் மந்த நிலை

தற்போது நாட்டின் மீட்சியின் முதன்மைக் காரணியாக விளங்குவது சுற்றுலா பயணிகளின் வருகை. மத்திய கிழக்கு போரால் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.

விமானப் போக்குவரத்து நிறுத்தம் மற்றும் வான்வெளி மூடல் ஆகியவை இணைப்பைத் தடைசெய்வதால் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளில் 60 வீததுக்கும் அதிகமானோர் வளைகுடா மையங்கள் வழியாகப் பயணிக்கின்றனர்.

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! | Current Situation In Sri Lanka Middle East War

மேலும், இலங்கையின் பௌதீகப் பாதுகாப்பு இருந்தபோதிலும், மேற்கத்தியப் பயணிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒரே ஆபத்து மண்டலமாகக் கருதுவதால், தங்கள் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றன.

சுற்றுலாவில் ஏற்படும் மந்தநிலை, அந்நியச் செலாவணி வரவை உடனடியாகக் குறைத்து, சுற்றுலா விடுதிகள், போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்பைப் பாதிக்கின்றது.

இதன்படி இலங்கையின் தற்போதைய நிலை என்பது சவால்களும் நம்பிக்கைகளும் கலந்த ஒரு திருப்புமுனையாகும்.

கடந்த சில ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், தற்போது நாடு மெல்ல மெல்ல மீட்சியை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் மத்திய கிழக்கு போர் சூழல் இதற்கு ஒரு பெரிய கேள்வி குறியாகவும் தடையாகவும் இருப்பது எதிர்கால பொருளாதார நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றக்கூடும் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றக்கூடும் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Abi அவரால் எழுதப்பட்டு, 30 March, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020