இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றக்கும்பல் உறுப்பினர்
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சிவப்பு அறிவித்தல்
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஓமானுக்குச் சென்ற நிலையில் சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் நாட்டிற்கு வந்த அவரை விமான நிலையத்தில் காத்திருந்த விசேட அதிகாரிகள் குழு பொறுப்பேற்றது.
தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல திட்டமிட்ட கொலைச் சம்பவங்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 1 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
2 நாட்கள் முன்