NPP நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
National People's Power - NPP
Muhammad Faizal
By Sathangani
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் (Muhammad Faizal) பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி நேற்று (29) இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்