இலங்கையின் வகுப்பறைகளில் 16 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் : வெளியான தகவல்
இலங்கையின் 2025 அரச பாடசாலைகள் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு பரவியுள்ளனர் என்பதில் பெரிய வித்தியாசத்தைக் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (DCS) புள்ளிவிபரங்களின்படி, தேசிய சராசரி 16 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாலும், ஒரு வகுப்பறையில் உண்மையான அனுபவம் பெரும்பாலும் ஒரு பிள்ளை கற்கும் பாடசாலை வகையைப் பொறுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை ஆரம்பப்பிரிவு பாடசாலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி
5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கின்ற பாடசாலைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் "வகை 3" பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒப்பீட்டளவில் இங்கு 34,000 ஆசிரியர்கள் 580,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கையாளுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரிய "1AB" பாடசாலைகளுக்கு மாறாக, விஞ்ஞான பாடங்களை வழங்கும் நகர்ப்புற பாடசாலைகள் தங்கள் மாணவர்களை நிர்வகிக்க 82,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட மிகப் பெரிய பணியாளர்களைக் கொண்டுள்ளன.
இந்தநிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான இடைவெளி பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும் என்று DCS இன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பெருந்தோட்டங்களில், 168,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12,807 ஆசியர்கள் மட்டுமே உள்ள பாடசாலைகளில் படிக்கின்றனர் என குறிப்பிடப்படுகின்றது.
நவீன பாடத்திட்டத் தேவை
இலங்கையின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இந்தியாவின் எண்ணிக்கையை விட சிறப்பாகத் தெரிந்தாலும் 2025 தரவு கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகள் இன்னும் சிரமத்தில் இருப்பதைக் காட்டுகிறது.
நாடு முழுவதும் உள்ள 229,661 ஆசிரியர்களில் 114,034 பேர் பயிற்றப்பட்ட பட்டதாரிகள் என்றும், 85,296 பேர் "பயிற்சி பெற்ற" பட்டதாரிகள் அல்லாதவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்தப் பிரிவில் ஆண் ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது பெண் ஆசிரியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்தவகையில் 180,975 பெண் ஆசிரியர்கள் 48,686 ஆண் ஆசிரியர்களும் உள்ளனர். "வகை 3" ஆரம்பப்பிரிவு பாசாலைகளுக்கு 83 சதவீத ஆசிரியர்கள் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
6,157 பாடசாலைகள் சிங்களத்தில் பிரத்தியேகமாக கற்பிக்கின்றதுடன் 2,977 பாடசாலைகள் தமிழ் மொழியில் கற்பிக்கின்றன என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
நவீன பாடத்திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 40 மும்மொழிப் பாடசாலைகள் மற்றும் இருமொழி (ஆங்கில - நடுத்தர) விருப்பங்களைக் கொண்ட சுமார் 839 பாசாலைகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவும் உள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |