இந்தியாவில் தொடருந்தில் கடத்தப்பட்ட அரிய வகை பாம்பு...! கோடிக்கணக்கில் பெறுமதி
பீகாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய அரிய வகை சிவப்பு மண்ணுளிப் பாம்பைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹம்மது சதுல்லா மற்றும் உபெந்திர குமார் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கயா தொடருந்து நிலையத்தில் காவல்துறையினர் முன்னெடுத்த Operation WILEP என்ற சிறப்பு சோதனையின் போது இந்த அரிய பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரி
இந்தநிலையில், நான்கு அடி நீளமுள்ள சிவப்பு மண்ணுளிப் பாம்பு இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சர்வதேச கருப்புச் சந்தையில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இப்பாம்பை, பிரயாக்ராஜிலிருந்து ஹாவ்ரா ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் தொடருந்து மூலம் இவர்கள் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான இப்பாம்பைக் கடத்தியவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட பாம்பு மேலதிக நடவடிக்கைகளுக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |