பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Upcountry People Sri Lankan Schools School Children Ceylon Teachers
By Sathangani Feb 05, 2026 04:03 AM GMT
Report

இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த தீர்மானத்தினால் மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரச்செல்வன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

மலையக மாணவர்கள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 1,500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 3,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Decision To Close Schools With Low Student Numbers

தற்போது மாணவர்கள் 3 கிலோமீற்றர் சுற்றளவிற்குள் கல்வி கற்கும் வகையில் பாடசாலைகள் அமைந்துள்ளன. எனினும், புதிய சுற்றுநிரூபத்தின் ஊடாக இந்தத் தூரத்தை 5 கிலோமீற்றராக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு திட்டமிட்ட செயல், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மலையக மாணவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

அரசாங்கம் மீளாய்வு செய்தல்

மலையக மாணவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே ஒரே வழி என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்.

பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Decision To Close Schools With Low Student Numbers

இதேவேளை, அரசாங்கம் சமத்துவமான கல்வி என்றுக் கூறினாலும் இதுவரை சமத்துவமான பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை“ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இயலாமை! ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராஜித

அரசாங்கத்தின் இயலாமை! ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராஜித

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019