தமிழன் பிச்சை எடுக்க மாட்டான் - தங்கச்சி.... : நிர்மலா சீதாராமனுக்கு கமல் எடுத்துரைப்பு

Kamal Haasan Smt Nirmala Sitharaman India
By Dharu Feb 05, 2026 08:35 AM GMT
Report

இந்திய மாநிலங்களவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழில் பேசிய சில கருத்துக்கள் தற்போது கவனத்தை பெற்றுள்ளது.

அண்மையில் இந்திய மாநிலங்களவையில் அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுசெலவு திட்டத்தை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக இலங்கைக்கும் பொரும் தொகையை இந்தியா ஒதுக்கியுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார். எனினும் தமிழ்நாடு மீதான இந்திய அரசின் கவனம் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் கமலின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.

கிளிநொச்சியில் 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில் 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

இந்தியில் பிச்சை எடுக்கலாமே

இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான் - தங்கச்சி.... : நிர்மலா சீதாராமனுக்கு கமல் எடுத்துரைப்பு | Kamal Haasan Calls Nirmala Sitharaman Thangachi

தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி.

இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான்.

இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா.

எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள்.

அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

உடனடி கவலை 

எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான் - தங்கச்சி.... : நிர்மலா சீதாராமனுக்கு கமல் எடுத்துரைப்பு | Kamal Haasan Calls Nirmala Sitharaman Thangachi

57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969 பிப்ரவரி 3-ம் திகதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன்.

இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன்.

எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன்.

இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். இந்த உரையை ஒரு துளி கோபமும் இல்லாமல் எழுதுவதற்கு மகாத்மா காந்தி எனக்கு உதவினார்.

தர்க்க ரீதியான வாதங்களை முன்வைக்க தந்தை பெரியார் எனக்கு உதவினார். இந்த மாபெரும் ஜனநாயகக் கட்டிடத்தின் மாண்பைப் புரிந்து கொள்ள அண்ணா எனக்கு உதவினார்.

உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள்.

ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வெள்ளைக்கார கல்வி

எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால், தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான் - தங்கச்சி.... : நிர்மலா சீதாராமனுக்கு கமல் எடுத்துரைப்பு | Kamal Haasan Calls Nirmala Sitharaman Thangachi

நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை.

'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. இந்த அவையில் நான் பேசும் வார்த்தைகள் உங்களில் சிலருக்குக் காயத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், மேலும், நான் கடவுளை நோக்கி கைகூப்பப் போவது கிடையாது. எனது பகுத்தறிவு மூளை கடவுள் என்ற பிம்பத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அப்புறப்படுத்திவிட்டது” என்று பேசினார்.

பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான்.

அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது.

அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.

ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே.

உங்கள் சாபங்கள்

தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.

தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்.

உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'.

எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்" என்று கமல்ஹாசன் எம்.பி. பேசினார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026