கிளிநொச்சியில் 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
By Shalini Balachandran
Courtesy: சுடரோன்
கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (05-02-2026) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக நடவடிக்கை
இந்தநிலையில், தொடர்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றது.
மேலும், அண்மையில் மாங்குளம் பகுதியில் துணுக்காய் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 மேலதிக தகவல் - சுடரோன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி