விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : உர இறக்குமதிக்கு கிடைத்த அனுமதி
அரச உரக் கம்பெனி லிமிடெட் மூலம் 15,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
அதன்படி அரச உரக் கம்பெனி லிமிடெட் மூலம் தனியார் துறையின் கம்பனிகளுடன் 2023/24 பெரும்போகம் தொடக்கம் உர இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 2023.07.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எஞ்சிய போகங்களுக்கும் திறந்த சந்தையில் நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காக போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடித்து, 15,000 மெற்றிக்தொன் யூரியாவை அரச உரக் கம்பெனி லிமிடெட் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
