மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த 17 வயதான இளைஞன்
Sri Lanka Police
Batticaloa
Sri Lankan Peoples
By Kiruththikan
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
17 வயதான இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று ரூராணியாப் பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள மேல்மாடியில் வர்ணப்பூச்சில் ஈடுபட்டுகொண்டிருந்த போதே குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அப்துல் காதர் சாபித் எனும் 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.
சம்பவத்தின் பின்னணி
மேல்மாடியில் நண்பர்களுடன் இணைந்து வர்ணப் பூச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கால் தவறி மின் கம்பியை பற்றிப் பிடித்துள்ள போதே குறித்த மின்சாரா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி