இலங்கையில் ஒரு வருடத்தில் தத்துக்கொடுக்கப்படும் 1700 குழந்தைகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்காக மற்றவர்களிடம் கொடுப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் தத்தெடுப்பதற்காக பிறருக்கு வழங்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் ( Registrar General's Department) சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) லக்ஷிகா கணேபொல (Lakshika Ganepola) தெரிவித்தார்.
அத்துடன் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரச் சிக்கல்
பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் போது, அது குறித்த தகவலை பதிவாளர் திணைக்களத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
திணைக்களத்திற்கு கிடைத்த தகவல்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சனைகளே குழந்தைகளை பிறரிடம் தத்து கொடுப்பது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |