யாழ்ப்பாணத்தில் அன்னதான மண்டபத்தை திறந்துவைத்தார் சுமந்திரன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை சக்தி அம்மன் ஆலய அன்னதான மண்டப திறப்பு விழா இன்று(1) இடம்பெற்றது
ஆலயத் தலைவர் பொன்னுச்சாமி பிரேமதாஸ் தலைமையில் பிற்பகல் 12:30 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் திறப்பு விழா ஆரம்பமானது
புதிதாக கட்டப்பட்ட அன்னதான மண்டபத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்
நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ்,முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன்,மருத்துவர் வேலுப்பிள்ளை சிவநேசன்,சமாதான நீதிவான் ஜெயபால கிருஷ்ணன், காணி நன்கொடையாளி பொன்னையா பெரியதம்பி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

நிகழ்வின் இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்