கொட்டும் மழையிலும் யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.
அந்தவகையில் இன்று (01) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தையிட்டி விகாரை தொடர்பில் உண்மைக்கு அப்பாற்பட்ட விடயங்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்..


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்