ஈரான் - அமெரிக்கப் போரில் பலிபீடமாகும் இலங்கை...!
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்தம் மற்றும் செங்கடல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்து சமுத்திரத்தில் தனது பிடியை இறுக்க இலங்கையின் அமைவிடத்தை அமெரிக்கா ஒரு முக்கிய தளமாக மாற்றத் துடிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தற்போதைய அரசு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுதவிகளைத் தக்கவைக்க, ஈரானுடனான வர்த்தக உறவுகளைத் துறந்து அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு வியூகங்களுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், ஈரானிய மசகு எண்ணெய் மற்றும் தேயிலை ஏற்றுமதியை முடக்கும் சர்வதேசத் தடைகள் மூலம் இலங்கையின் வாழ்வாதாரத்தைப் பிணைக்கைதியாகப் பிடித்துள்ள அமெரிக்கா, தனது இராணுவத் தேவைகளுக்காக இலங்கையின் வான்பரப்பு மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்த மறைமுக அழுத்தம் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஒருபுறம் சீனாவையும் மறுபுறம் ஈரானையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்காவின் அர்மடா (Armada) திட்டத்தில், இலங்கை தனது விருப்பத்திற்கு மாறாக ஒரு நிழல் போர்முனையாக மாற்றப்படும் அபாயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தச் சர்வதேசச் சதுரங்கத்தில், தனது நடுநிலைமையை இழந்தால் ஈரானிய எரிசக்திப் பகையையும், இணங்கினால் சீனாவையும் பகைக்க வேண்டிய இக்கட்டான பலிபீடத்தில் இலங்கை ஒரு மூலோபாயப் பிணைக்கைதியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசறிவியல் ஆசான் மூ. திருநாவுக்கரசு விரிவாகத் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்