ராஜபக்ச வழியில் அநுர..! பயங்கரமான கிவுல் ஓயா திட்டம் - அரசியல் ஆய்வாளர் சீற்றம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa NPP Government
By Erimalai Feb 01, 2026 04:38 AM GMT
Report

கிவுல் ஓயா திட்டம் அபாயமானது என்றும் அதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் எனவும் அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக வவுனியா வடக்கில் இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ச அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. 

தையிட்டி தொடர்பில் அநுரவின் மாறுபட்ட கருத்து! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தையிட்டி தொடர்பில் அநுரவின் மாறுபட்ட கருத்து! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

அமைச்சரவையில் அங்கீகாரம்

வரவு செலவு திட்டத்திலும் இதற்காக நிதி ஒதுக்கபட்டுள்ளதோடு அமைச்சரவையிலும் அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

ராஜபக்ச வழியில் அநுர..! பயங்கரமான கிவுல் ஓயா திட்டம் - அரசியல் ஆய்வாளர் சீற்றம் | Protest Against Kivul Oya Irrigation Scheme

இது ஒரு படுமோசமான திட்டம். இது அரசியல் ரீதியாக, சூழலியல் ரீதியாகவும் தமிழ் மக்களை பாதிக்கின்ற ஒரு திட்டம். 

இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான பிரதான காரணம் வெலி ஓயாவிலும், வவுனியா வடக்கிலும் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு நீர் வளங்குவதற்காகும், புதிய சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்குமாகும். 

ஆகவே அமைச்சர் சந்திரசேகர் சொல்லுவது போல தமிழ் மக்களின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல. மாறாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த திட்டம். 

பல வருட போராட்டத்தின் பலன் - யாழில் பலமற்ற, தரமற்ற ஒரு வீதி!

பல வருட போராட்டத்தின் பலன் - யாழில் பலமற்ற, தரமற்ற ஒரு வீதி!

நீரில் மூழ்கும் அபாயம்

இந்த திட்டத்தினூடாக இன்னும் சிங்கள குடியேற்றங்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆகவே இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டியது தமிழ் மக்களது கடமை. இது தனி திட்டம் மாத்திரம் அல்ல.

ராஜபக்ச வழியில் அநுர..! பயங்கரமான கிவுல் ஓயா திட்டம் - அரசியல் ஆய்வாளர் சீற்றம் | Protest Against Kivul Oya Irrigation Scheme

ஏற்கனவே இருக்கின்ற தமிழ் கிராமங்களும் அழியக்கூடிய அபாயமும் இருக்கின்றது. குறிப்பாக வவுனியா வடக்கில் உள்ள அனைத்து கிராமங்களும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

உண்மையில் அரசாங்கத்தினுடைய முழு கவனமும் முல்லைத்தீவு சிங்கள குடியேற்றத்திலேயே உள்ளது.  வடக்கு கிழக்கை மையமாக இணைத்த மாவட்டம் திருகோணமலை மாவட்டம்.

சதித்திட்டம் 

திருகோணமலை மாவட்டத்தில் கிட்டத் தட்ட குடியேற்றங்கள் நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு அடுத்த மைய்ய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம்.

ராஜபக்ச வழியில் அநுர..! பயங்கரமான கிவுல் ஓயா திட்டம் - அரசியல் ஆய்வாளர் சீற்றம் | Protest Against Kivul Oya Irrigation Scheme

இதனூடாக தமிழர் தாயகத்தில் உள்ள ஒருமைப்பாட்டை இல்லாமல் செய்கின்ற சதித்திட்டம் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது. 

அதனுடைய முயற்சிகளில் ஒன்று தான் இந்த கீவில் ஓயா திட்டம். ஆகவே இந்த கிவில் ஓயா திட்டத்தை எதிர்க்க வேண்டியதும், அதற்காக போராட வேண்டியதும் ஒவ்வொருவருடைய கடமையாகும். 

ஆகவே சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் தான் வெற்றி பெறும் என்றும் இதனால் தமிழரசு கட்சி போன்ற அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் ஏனைய கட்சிகள் பங்கேடுக்கும் என்று கூறி விட முடியாது என்றார். 

அரசியல் கைதிகளின் மனித உரிமைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

அரசியல் கைதிகளின் மனித உரிமைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026