தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை
Sri Lanka
Drones
Port City Colombo
By Sindu
பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களுக்கான விமானப் பரிசோதனைகள் தற்போது கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்று வருகின்றது.
இம்மாதம் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ செயல்விளக்கத்துக்கு முன்னதாக இந்த பரிசோதனை இடம்பெறுகிறது.
நாட்டில் பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆயத்த நடவடிக்கையாக இந்த விமானப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.
முன்னோடித் திட்டம்
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட முதல் ட்ரோன் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியமான பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி