எரிபொருள் விலையை குறைத்தது மற்றுமொரு நிறுவனம்!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு நிகராக சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைக் குறைத்துள்ளது.
இந்தநிலையில், நேற்று (31-01-2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சினோபெக் நிறுவனத்தில் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் இரண்டு ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை
இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோல் 292 ரூபாய்க்கும் ஒட்டோ டீசல் 277 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இருப்பினும், பெட்ரோல் 95 ஒக்டேன் 340 ரூபாய் மற்றும் சுப்பர் டீசல் 323 ரூபாய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையைத் திருத்தியமைத்ததைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்