சேவல் கூவியும் விடியல் இல்லை

Sri Lanka Politician Sri Lankan political crisis Senthil Thondaman Central Province
By Independent Writer Jul 26, 2024 11:30 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

தாத்தா காலத்தில் இருந்து ஓட்டுப்போட்டு சந்தா பணம்  செலுத்தி வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு என்ற சாக்கை அரசியல் தலைமுறையின் பேரன் கொண்டு வந்துள்ளார்.

மே 1 உழைப்பாளர்களின் தினம் என்ற அரங்கேற்றத்தில் உச்ச தலைவரை வைத்து 1700 ருபாய் சம்பளம் என போட்ட வித்து தேயிலையை போல செழிப்படையும் என்றால், அது செல்லுபடி இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு சம்பளம் உயரும், தீபாவளிக்கு சம்பளம் உயரும் என கடவுள் முருகனின் பெயருடைய மலையக எம்.பி காலம் தள்ளினார்.

அதேபோல் அரசியல் என்பது அவர்களின் பரம்பரை கடந்து நடந்து வருவது போல சம்பள உயர்வு என்ற சொல்லும் வாய்ச்சொல்லாக தொடர்கிறது.

எதை வைத்து இவர்கள் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்குகிறார்கள்? என தெரியவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு: சற்றுமுன் வெளியான அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு: சற்றுமுன் வெளியான அதிவிசேட வர்த்தமானி

பெரும்பாலான தோட்டங்கள்

பெரும்பாலான தோட்டங்கள் தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்ததை மறந்து ஒருவேளை நியதிகளை வகுக்கின்றனரா? என்பதும் தெரியவில்லை.

தோட்ட கம்பெனிகளிடம் சம்பள உயர்வுக்கு முன்னதாக பேச்சுவார்த்தை இடம்பெற்றதான அறிவிப்புகள் இல்லாமலே அரசியல் மேடை அரங்கேற்றத்தில் வழங்கிய உறுதிமொழி உறுதியில்லாமல் சரிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சேவல் கூவியும் விடியல் இல்லை | 1700 Rupees Salary For Estate Workers

சம்பளத்தை உயர்த்தவில்லை என்றால் தோட்ட கம்பெனிகளை வெளியேற்றுவோம், ஒப்பந்தங்களை இரத்து செய்வோம் என கூறுவது சாத்திய நடைமுறையல்ல. கூட்டு ஒப்பந்தக் காலத்தில் மட்டும் தொழிற்சங்கங்கள் “புத்துயிர் ” பெறுகின்றது.

தாமே சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்தோம் என மார்தட்டிக் கொண்டு தொழிலாளர்களைத் தீர்மானகரமான சக்தியாக மாற்றுவதில் பின்னுக்கும் போக்குத் இன்று வரை தொடர்கிறது.

இது மலையகத் தொழிற்சங்கங்களின் பிற்போக்குத் தன்மைக்கான  நடைமுறை சான்று. சம்பள உயர்வு என்றவுடன் தோட்ட கம்பெனிகள் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி, இறப்பர் ஏற்றுமதி வீழ்ச்சி, சமூக திட்ட நடைமுறை செலவு, போன்ற காரணங்களை எடுத்துக்கொள்வது வழக்கமான விடயம்.

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியான அறிவிப்பு

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியான அறிவிப்பு

பெருந் தோட்டக் காணிகள் 

உண்மையாக இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அடிப்படையற்ற விடயங்களாகும். இவை அனைத்தும் தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளாகும். 2003 ஆம் ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்த சட்டத்திற்கு அமைவாக காலத்திற்கு காலம் கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது.

ஆனால் இங்கு தோட்ட கம்பெனிகளிடம் சம்பள உயர்வு தொடர்பில் திட்டவட்ட கருத்துக்களை முன் வைப்பதை புறம்தள்ளி, தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஒரு சாட்டு பொருளாகிறது.

கம்பெனிகள் கூறும் காரணங்களை மறுதலிக்க தொழிற்சங்கள் மறுதலிக்கிறது. திருத்த சட்டங்களுக்கு அமைய சம்பளம் பற்றி பேசுவதை தவிர்த்து வாழ்கைச் செலவை அடிப்படையாகிய சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

சேவல் கூவியும் விடியல் இல்லை | 1700 Rupees Salary For Estate Workers

பெருந் தோட்டக் காணிகள் சிறுதோட்ட உடமையாளர்களுக்குக் குத்தகைக்கு விடப்படுகின்ற நிலையில் தொழிலாளர்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்த மக்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இது நீண்டகால கோரிக்கைக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குகளுக்காக ஓங்கி ஒலிக்கும் குரல்களை செவி மடுக்காது?

மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கான குரல்களை ஓங்க செய்யும் நடைமுறையை வகுக்க வேண்டும். விடியல் இல்லாத சேவல் கூவலுக்கு ஒன்றிணைந்து மக்கள் முற்றுப்புள்ளி இடும் காலம் வந்தால் மாத்திரமே சம்பள பிரச்சினையானது விடிவு வரும்.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 26 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026