அவசர அம்புலன்ஸ் சேவை 83 பகுதிகளில் இடைநிறுத்தம்
By Vanan
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை 83 பகுதிகளில் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் அம்புலன்ஸ் சேவை கோரி 1990 என்ற எண்ணிற்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் முழுமையான வசதிகளுடன் கூடிய இந்த அவசர அம்புலன்ஸ் சேவை இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
1990 என்ற விஷேட தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த சேவையை பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
அவசர நிலமைகளின் போது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இச்சேவை 83 பகுதிகளில் இடைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


