முதல் போட்டியில் இந்திய வெற்றி - நம்பிக்கை கொடுத்த ராகுல் ஜடேஜா
கே.எல்.ராகுல், ஜடேஜா துணையுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ஆட்டமிழப்பு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழக்க 5வது ஆட்டமிழப்புக்காக ஜோடிசேர்ந்த ஜடேஜா மற்றும் ராகுல் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றது
குறித்த போட்டியில் கே.எல்.ராகுல் 75 ஓட்டங்களுடனும் , ஜடேஜா 45 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 5 ஆட்மிழப்புக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் 3 ஆட்மிழப்புக்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ஆட்மிழப்புக்களையும் வீழ்த்தினர்.
முதலாம் இணைப்பு
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
#TeamIndia go 1⃣-0⃣ up in the series! ? ?
— BCCI (@BCCI) March 17, 2023
An unbeaten 1⃣0⃣8⃣-run partnership between @klrahul & @imjadeja as India sealed a 5⃣-wicket win over Australia in the first #INDvAUS ODI ? ?
Scorecard ▶️ https://t.co/BAvv2E8K6h @mastercardindia pic.twitter.com/hq0WsRbOoC
இதன்படி இந்தியா- அவுஸ்திரேலிய இடையிலான முதலாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
ஹர்திக் பாண்டியா
இந்தியாவில் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டி இடம்பெறவுள்ளதால், அதற்கு அணியை சரியான திட்டமிடலுடன் தயார்படுத்துவதற்கு இந்த தொடர் அடித்தளமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இன்றைய போட்டியில் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துகிறார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 188 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது.
மிச்சரல் மார்ஸ்
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக மிச்சரல் மார்ஸ் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறியதால் அவுஸ்திரேலிய அணியின் ஊட்ட எண்ணிக்கை 188க்குள் மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி.
அவுஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட்.
