பிரான்ஸில் அரச எதிர்ப்பு முற்றுகை - 200 கைதுகள்! லா சப்பலுக்கு சென்ற தமிழர்களுக்கும் பாதிப்பு!
பிரான்ஸின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) இன்று மதியம் பதவியேற்கவுள்ள நிலையில் அதற்கு முன்னரே தலைநகர் பரிஸ், மார்செய்ல், லியோன், போர்தோ உட்பட முக்கிய நகரங்களில் பெரும் அரச எதிர்ப்பு முற்றுகைப்போராடடங்கள், தீயிடல் சம்பவங்கள் உட்பட்ட வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது வரை பிரான்ஸ் முழுவதும் ஏறக்குறைய 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவர நிலைமையைத் தடுப்பற்காக இன்று நண்பகல் வரை பாதுகாப்பு தரப்பால் 200க்கு மேற்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பதவி விலகும் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் தலைநகர் பரிஸில் மட்டும் 132 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பரிசின் முக்கிய தொடருந்து நிலையமான கார் து நோட்டின் (Gare du Nord) நுழைவாயில்கள் காவற்துறையால் தடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது.
களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர்
குறித்த நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
அதன் அருகில் தமிழர்களின் அதிக வணிகநிலையங்கள் அமைந்துள்ள லா சப்பலுக்கு சென்ற தமிழர்கள் பலரும் இந்த சம்பவங்களில் சிக்கிக்கொண்டதுடன் கண்ணீர் புகைவீச்சு பாதிப்புக்கு சிலர் ஆளாகியுள்ளனர்.
இதேபோல பிரித்தானியாவுக்கான யூரோஸ்டார் தொடருந்துக்கு செல்லவிருந்த பயணிகளும் சிரமப்பட்டுள்ளனர். நாடளாவிய முற்றுகை போராட்டத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் சுமார் 80,000 பாதூகாப்பு தரப்பினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடியில் சிக்கியுள்ள இம்மானுவேல் மக்ரோன்
இதில் 30க்கு மேற்பட்ட பாதுகாப்பு அணிகள் பரிஸ் பிராந்தியத்தில் மட்டும் நிலைகொண்டுள்ளன. நாடாளவிய ரீதியில் இவர்களுக்கு உதவியாக பல கவச வாகனங்களும் 26 உலஙகு வானூர்திகளும் சேவையில் இருந்தன.
நெருக்கடியில் சிக்கியுள்ள அரச தலைர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), தற்போது தனது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னையும் ஒரு பலிக்கடாவாக மாற்றியுள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன.
ஐந்தாவது பிரெஞ்சுக்கு குடியரசில் இவ்வளவு கடுமையான நெருக்கடி முன்னர் ஒருபோதும் ஏற்படாத நிலையில் இந்த நெருக்கடியின் நீட்சி அரச தலைவர் மக்ரோனையும் ஆட்சியில் இருந்து அகற்றும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
