விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்தும் அமெரிக்கா..! பாதுகாப்பின் உச்சத்திற்கு சென்ற ட்ரம்ப்
“கோல்டன் டோம்” என்று அழைக்கப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான தனது திட்டம் குறித்த புதிய விவரங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப (Donald Trump) அறிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்கு மொத்தம் சுமார் $175 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
“கோல்டன் டோம்” என்பது அமெரிக்கா (US) விண்வெளியில் வைக்கும் முதல் ஆயுதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்டன் டோமின் திறன்
கோல்டன் டோம் என்பது தரை மற்றும் விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை கேடய அமைப்பாகும், இது ஏவுகணைகளை பல கட்டங்களில் கண்டறிந்து, கண்காணித்து நிறுத்தவும் புறப்படுவதற்கு முன் அவற்றை அழிக்க அல்லது நடுவானில் இடைமறிக்கும் திறனை கொண்டது.
இந்த புதிய அமைப்பு அமெரிக்காவின் வெற்றிக்கும் உயிர்வாழ்விற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறிய ட்ரம்ப், அது முழுமையாக கட்டமைக்கப்பட்டவுடன், உலகின் பிற பக்கங்களிலிருந்து ஏவப்பட்டாலும், விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட, ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த ஆயுத அமைப்பு தனது பதவிக் காலம் முடிவதற்குள் சுமார் மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் அயன் டோம்
இவ்வாறானதொரு பின்னணியில், கோல்டன் டோம் திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்படவுள்ளதாக சர்வதேச தரப்புகள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குவதை எதிர்த்து ஈரான், ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர் தாக்குதல்கள் நடக்கினற நிலையில், அங்கிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட அமைப்பு "அயன் டோம்" ஆகும்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
