ஒரே இலக்கத் தகடுகளுடன் சுற்றித்திரிந்த கார்கள்
ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்களை வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு வாகனங்களில் எது போலியானது என்பதைக் கண்டறிந்து இன்று (13.2.2025) கல்கிஸ்ஸை (Mount Lavinia) நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரகசிகமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு டொயோட்டா பிரியஸ் கார்கள் (Toyota Prius) கண்டுபிடக்கப்பட்டன.
மேலதிக விசாரணை
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் காவல்துறை புலனாய்வு அதிகாரிகள் தயாரித்த ஒரு நுணுக்கமான திட்டத்தை செயல்படுத்தியதன் ஊடாக குறித்த கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் ஒரு கார் தெகிவளை முஹுது மாவத்தையில் தொடருந்து நிலையத்திற்கு அருகிலும், மற்றொன்று தலுகமவின் முதியன்சேகே வத்த பகுதியிலும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலதிக விசாரணைக்காக வாகனங்கள் தற்போது தெகிவளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வாகனங்களில் எது போலியானது என்பதைக் கண்டறிந்து, அதை அரசு பகுப்பாய்வாளரால் பரிசோதிக்க உத்தரவுகளைப் பெறுவதற்காக இன்று (13) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)