இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! வெளியான அறிவிப்பு
By Pavan
2022 க்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3,568 பரீட்சை நிலையங்களில் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறுகிறது.
பரீட்சை ஏற்பாடுகள்

எதிர்வரும் (29) முதல் எதிர்வரும் ஜூன் (08) வரை பரீட்சைகள் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்க்காட்டியுள்ளார்.
மேலும், பாடசாலை ரீதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் ஆகியன உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பட்டதாரிகளின் அனுமதியட்டைகள் அவர்களது சொந்த முகவரிக்கும் கடந்த 15 ஆம் திகதி முதல் தபாலில் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி