ஒடிசாவில் மற்றுமொரு தொடருந்து விபத்து!
India
Accident
By pavan
கோரமண்டல் கடுகதி தொடருந்து விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு தொடருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்பட்ட பாதிப்பு
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர சம்பவத்தில் 280 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்