பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம்

Sri Lanka Police Vavuniya Accident Death
By Thulsi Sep 17, 2025 01:03 AM GMT
Report

புதிய இணைப்பு

வவுனியா (Vavuniya) - கொறவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (16.09.2025) இரவு 8.30 மணிக்கு வவுனியா தினச்சந்தை கட்டடத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த பெண் புறப்படுவதற்கு தயாராக வீதியின் கரையில் நின்றுள்ளார்.  

தூக்கி வீசப்பட்ட பெண்

இதன்போது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து கொறவப்பொத்தானை திசைநோக்கி சென்ற டிப்பர் வாகனம் அவரை மோதியுள்ளது.

பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம் | One Dead 6 Injured In Southern Expressway Accident

விபத்தில் குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் காயமடைந்திருந்தார்.

விபத்தை ஏற்ப்படுத்திய மஞ்சள் வர்ண டிப்பர் வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

முதலாம் இணைப்பு 

இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கோர விபத்து இன்று (16.09.2025) அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த குறித்த பெண், டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தெரியவந்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்

தென்னிந்திய திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்

காவல்துறை விசாரணை

விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம் | One Dead 6 Injured In Southern Expressway Accident

காயமடைந்தவர்கள் கஹதுடுவ வைத்தர மாவட்ட வைத்தியசாலை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த ஒருவரை நாட்டிற்கு வந்ததும் அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிற்றூர்தியில் செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது உயிரிழந்த பெண் சிற்றூர்தியின் முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர் சிற்றூர்தி ஓட்டுநர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாரதியின் அதிவேகமும், உறக்கமும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி வெடித்த பாரிய போராட்டம்

ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி வெடித்த பாரிய போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026