ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை!
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்கும் எந்தவொரு நாடும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி (Esmaeil Baghaei) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆக்கிரமிப்பு
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடற்படைகளை அனுப்புவது இராணுவ மற்றும் தளவாட ஆதரவு உபகரணங்களை வழங்குவது அல்லது படைவீரர்களைப் பணியமர்த்துவது ஆகியவை ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் பங்கேற்பதற்குச் சமமான ஒரு பகைமை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
A sparrow that tries to fly after a stork will eventually break its legs (Korean proverb). Any direct or indirect involvement in acts of aggression or in inhumane economic terrorism against Iran - including the deployment of naval forces, military and logistical support equipment, and personnel - will be regarded as a hostile and unlawful act amounting to participation in the US aggression against Iran. Such actions not only violate Article 2 (4) of the Charter of the United Nations but also fall within the definition of an act of aggression set out in UN General Assembly Resolution 3314. Invoking seemingly legitimate pretexts such as “protecting freedom of navigation” or “countering piracy” does not alter the unlawful and hostile nature of such actions. Our message is unequivocal: No bilateral agreement or commitment with the United States can constitute legitimate grounds for violating a state’s obligations under international law or for participating in the US-Israeli military aggression against Iran. Any state that may participate in such unlawful aggressions, in whatever form, shall bear full responsibility for the resulting repercussions.
— Esmaeil Baqaei (@IRIMFA_SPOX) November 12, 2026
அமெரிக்காவுடனான எந்தவொரு இருதரப்பு ஒப்பந்தமோ அல்லது அர்ப்பணிப்போ, சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஒரு நாட்டிற்கு உள்ள கடமைகளை மீறுவதற்கோ அல்லது ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பில் பங்கேற்பதற்கோ சட்டப்பூர்வமான காரணமாக அமைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் எந்த வடிவத்தில் பங்கேற்றாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்குச் சம்பந்தப்பட்ட நாடே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |